கூட்டுறவு வங்கியில் விவசாய பயிர்க்கடன் ரூ.12.110 கோடி தள்ளுபடி: முதல்வர் அறிவிப்பு 
தமிழ்நாடு

கூட்டுறவு வங்கியில் விவசாய பயிர்க்கடன் ரூ.12.110 கோடி தள்ளுபடி: முதல்வர் அறிவிப்பு

கூட்டுறவு வங்கியில் தமிழக விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.

DIN


சென்னை: கூட்டுறவு வங்கியில் தமிழக விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் தமிழக முதல்வர் பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி இந்த அறிவிப்பினை வெளியிட்ட போது அமைச்சர்கள் மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் மேசையை தட்டி வரவேற்றனர்.

இந்த அறிவிப்பின் மூலம் தமிழகத்தில் சுமார் 16.13 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்பினால், கடன் பெற்று விவசாயம் செய்த விவசாயிகள் பயனடைவார்கள்.

விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில், கடந்த 2016-ஆம் ஆண்டில் தமிழக அரசு பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

திமுகவினர் தேர்தலின் போது வாக்குறுதிகளைக் கொடுப்பார்கள். ஆனால் நிறைவேற்ற மாட்டார்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரே கட்சி அதிமுகதான் என்று முதல்வர் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

கடன் பத்திரங்கள் வாயிலாக ரூ. 5,000 கோடி திரட்டும் கனரா வங்கி!

சுபேதார் டிரைலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

போஸ் பாண்டி பாணியில் படம் பார்க்க அழைத்த ராதிகா!

SCROLL FOR NEXT