தமிழ்நாடு

பெரியார் பல்கலை. தேர்வு முடிவுகள் வெளியீடு

DIN

பெரியார் பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.

பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைவு பெற்ற சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான மாணாக்கர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இவர்களில் இளநிலை 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு, முதுநிலை 2-ம் ஆண்டு மற்றும் படிப்புகாலம் முடிந்த மாணாக்கர்களின் நவம்பர்-டிசம்பர் 2020-ன் பருவத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

தேர்வாணையர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைவேந்தர் பொ.குழந்தைவேல் பெரியார் பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகளை இணையதளத்தில் வெளியிட்டார். அப்போது, தேர்வாணையர் (பொ) எஸ்.கதிரவன், சிறப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

தேர்வு முடிவுகளை பெரியார் பல்கலைக்கழக இணையதளத்திலும், இணைவு பெற்ற கல்லூரிகளிலும் தெரிந்து கொள்ளலாம் என துணைவேந்தர் பொ.குழந்தைவேல் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்று எப்படி இருக்கும்?

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

SCROLL FOR NEXT