முகப்பு
தமிழ்நாடு

தேனி: கீழவடகரை காளியம்மன் கோயிலில் கொள்ளை

பெரியகுளம் அருகேவுள்ள  கீழவடகரை, பெருமாள்புரம் காளியம்மன் கோயிலில் நகை மற்றும் பணம் கொள்ளையடுக்கப்பட்டது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Updated On : 6 பிப்ரவரி, 2021 at 12:19 PM
கீழவடகரை, பெருமாள்புரம் காளியம்மன் கோயில்
பகிர்:

பெரியகுளம் அருகே  கீழவடகரை, பெருமாள்புரத்தில் உள்ள காளியம்மன் கோயிலில் நகை மற்றும் பணம் கொள்ளையடுக்கப்பட்டது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே  கீழவடகரை, பெருமாள்புரத்தில் உள்ள காளியம்மன் கோயில் உள்ளது.

வெள்ளிக்கிழமை கோயிலின் கதவை அர்ச்சகர் மூடிவிட்டு இன்று காலை கோயிலின் கதவை திறக்க வந்த போது, கோயிலின் கதவு உடைக்கப்பட்டு, கோயிலின் உள்ளேயிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.10,000 ஆயிரம் மற்றும் அம்மனுக்கு அணிவித்து இருந்த 10 பவுன் நகைகளை மர்ம நபர்கள் எடுத்து சென்று விட்டனர். 

Advertisement

இச்சம்பவம் குறித்து பெரியகுளம் காவல்துறையினர் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.