தமிழ்நாடு

அஷ்ட வராஹி அம்மன் கோயிலில் முதல்வர் வழிபாடு

DIN

தருமபுரி: தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே கெரகோடஅள்ளி அருள்மிகு அஷ்டவராஹி அம்மன் கோயிலில் புதன்கிழமை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வழிபட்டார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டம் வழியாக சேலத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக காரில் சென்றார்.

தருமபுரி மாவட்டம் வழியாகச் சென்ற முதல்வருக்கு, மாவட்ட எல்லையான காரிமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் கும்பாரஅள்ளி காவல்துறை சோதனைச் சாவடியில் மாவட்ட நிர்வாகம், அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் உயர்கல்வி, வேளாண் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு மலர்க்கொத்து அளித்து வரவேற்றார். சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), வே.சம்பத்குமார் (அரூர்), மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் யசோதா மதிவாணன், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத் தலைவர் டி.ஆர்.அன்பழகன் உள்ளிட்ட திரளான அதிமுக நிர்வாகிகள் முதல்வருக்கு வரவேற்பு அளித்தனர்.

மாவட்ட நிர்வாகம் சார்பில் சார் ஆட்சியர் மு.பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலர் க.ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குநர் க.ஆர்த்தி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மலர்க்கொத்து அளித்து வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து, கெரகோடஅள்ளியில் அண்மையில் புதிதாகக் கட்டப்பட்டு குடமுழுக்கு நடைபெற்ற அருள்மிகு அஷ்டவராஹி அம்மன் கோயிலில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வழிபட்டார்.

முன்னதாக கோயிலுக்கு வந்த முதல்வரை, அமைச்சர் கே.பி.அன்பழகன் குடும்பத்தினர் வரவேற்று அழைத்துச் சென்றனர். அப்போது, கோயில் அர்ச்சகர்கள் வேதமந்திரங்கள் ஓதி, சிறப்புப் பூஜைகள் செய்தனர். இந்த வழிபாட்டில் பங்கேற்ற கட்சியினர், பொதுமக்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய பிரதேசம்: 4 சாலை விபத்துகளில் 9 போ் உயிரிழப்பு

வட மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்

நெல் கொள்முதல் லஞ்சத்தை எதிா்த்தோரை கைது செய்வதா?: அன்புமணி கண்டனம்

பாய்மர வீராங்கனைக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

டெக் மஹிந்திரா நிகர லாபம் 41% சரிவு

SCROLL FOR NEXT