தமிழ்நாடு

தில்லி விவசாயிகள் போராட்டம்: திருமாவளவன் நேரில் ஆதரவு

DIN


புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் கடந்த நவம்பர் 26 முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு மற்றும் விவசாய பிரதிநிதிகள் இடையே நடைபெற்ற பல சுற்று பேச்சுவார்த்தைகளில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

இதனால், விவசாயிகளின் போராட்டம் நவம்பர் தொடங்கி தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்த நிலையில் தில்லி-ஹரியாணா எல்லையில் போராடி வரும் விவசாயிகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் ஆகியோர் நேரில் சென்று சந்தித்தனர். போராட்டத்திலும் பங்கெடுத்த அவர்கள், விவசாயிகளுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

முன்னதாக, விவசாயிகளைச் சந்திப்பதற்கு திருமாவளவன் மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT