தமிழ்நாடு

பவானியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மறியல் போராட்டம்

DIN

பவானியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலாளர் மீதான தாக்குதலைக் கண்டித்து அக்கட்சியினர் புதன்கிழமை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம், பவானியைச் சேர்ந்தவர் முடியரசன். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பவானி நகர செயலாளராகப் பொறுப்பு வகிக்கிறார். தொழில் விரோதம் காரணமாக முடியரசன் உள்பட 3 பேர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்தும் தாக்குதல் நடத்தியவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரியும் பவானி அரசு மருத்துவமனை முன்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் சிறுத்தை வள்ளுவன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் கோரிக்கை வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது. பொறியாளர் அணியின் மாநில துணைச் செயலாளர் எஸ்.எம்.சாதிக், மொடக்குறிச்சி தொகுதி செயலாளர் மதிவாணன், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி செயலாளர் அரங்க முதல்வன், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறையின் மாவட்ட அமைப்பாளர் பவானி நாகராஜ், பெருந்துறை சட்டமன்றத் தொகுதி செயலாளர் குணவளவன், அந்தியூர் ஒன்றிய செயலாளர் தங்கராசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பவானி காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இப்போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

பசுமை- குளிர்மை!

2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்!

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

SCROLL FOR NEXT