தமிழ்நாடு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு

DIN

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று சந்தித்தார். 

இதுகுறித்து ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில், இன்று மாலை 4.30 மணி அளவில் நான் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் அவர்களது அலுவலக அறையில் நேரில் சந்தித்து 15 நிமிடம் பேசினேன்.

அப்போது தமிழகத்திற்கான மத்திய அரசின் திட்டங்கள் விரைந்து முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் தமிழக நலன் காக்க மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தல் குறித்தும், கூட்டணி பற்றியும், அரசியல் நிலவரம் குறித்தும் பேசினேன்.

குறிப்பாக மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி, திட்டங்கள் ஆகியவை தமிழகத்துக்கு பயன் தரும் என்பதை தெரிவித்துக்கொண்டு அதற்காக நன்றியையும் கூறினேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஜி.கே.வாசன் நேற்று பிரதமர் மோடியை சந்தித்த நிலையில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தித்து பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT