கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள். 
தமிழ்நாடு

கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

DIN


ஈரோடு: கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து கரூர் மாவட்டம் மங்களப்பட்டி வரை 124 மைல் தூரம் செல்லும் கீழ்பவானி கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாய் மூலம் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. 

கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட்​ தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

இந்நிலையில், தற்போது இந்த கால்வாயில் 940 கோடி மதீப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்க தமிழக அரசு டெண்டர் விட்டுள்ளது. தமிழக அரசின் இந்த கான்கீரிட் அமைக்கும் திட்டத்தால் விவசாய விளைநிலங்கள் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் பாதிக்கப்படும் எனக்கூறி கீழ்பவானி பாசன பாதுகாப்பு சங்கத்தினர் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆர்ப்பாடத்தின் போது கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் அமைத்தால் நிலத்தடி நீர் முழுமையாக பதிக்கும் என்றும் தமிழக அரசு கான்கிரீட் திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஈரோடு , கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

SCROLL FOR NEXT