தமிழ்நாடு

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து: உரிமையாளர் உள்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு

DIN


சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக பட்டாசு ஆலையின் உரிமையாளர் உள்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சம்பவ இடத்திலே 9 பேர் உடல் கருகிய நிலையில் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தார். காயமடைந்தவர்கள் சாத்தூர், படந்தால், ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 26 பேர் சாத்தூர், சிவகாசி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த சம்பவம் குறித்து ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து சாத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் பெருமாள் தலைமையில் போலீசார் 5 தனிப்படை அமைத்து பட்டாசு ஆலை உரிமையாளர் மற்றும் குத்தகைக்காரர் உள்பட 6 பேரை தேடி வருகின்றனர். 

இந்நிலையில், பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 -ஆக அதிகரித்துள்ளது. மேலும் 26 பேர் மதுரை மற்றும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் 12 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் 7 மாத கர்ப்பிணி பெண்ணும், கணவன் மனைவியும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் உடல்கள் சாத்தூர், சிவகாசி அரசு  மருத்துவமனைகளில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதற்காக சாத்தூர் அரசு மருத்துவமனையில் இரண்டு டிஎஸ்பி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஆலையின் உரிமையாளர் உள்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஆலையின் உரிமையாளர் சந்தனமாரி, குத்தகைதாரர் சக்திவேல் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இதுதொடர்பாக 4 பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்த ராசிக்கு யோகம்!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

கடலோரக் காவல்படை வீரா்களிடையே டென்னிஸ் போட்டி

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மக்கள் விழிப்புணா்வோடு இருக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT