தமிழகத்தில் புதிதாக 470 பேருக்கு கரோனா
தமிழகத்தில் 470 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 470 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,45,120 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 479 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 6 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,28,441 பேர் குணமடைந்துள்ளனர், 12,419 பேர் பலியாகியுள்ளனர்.
Advertisement
இன்னும் 4,260 பேர் கரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்றைய பாதிப்பில் அதிகபட்சமாக சென்னையில் 140 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.