சட்டப் பேரவைத் தேர்தல்: சத்யபிரத சாகு நாளை ஆலோசனை
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நாளை (பிப்.18) மாலை மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நாளை (பிப்.18) மாலை மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
சட்டப் பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் தற்போதைய ஆட்சி வரும் மே மாதம் 24-ம் தேதியுடன் முடிவடையவுள்ளது. இதனையொட்டி சட்டப் பேரவைத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் அரசியல் கட்சியினர் பிரசாரங்களைத் தொடங்கி மேற்கொண்டு வருகின்றனர்.
தலைமைத் தேர்தல் அதிகாரிகள் தமிழகத்தில் ஆய்வு மேற்கொண்டு முன்னணி அரசியல் கட்சிகளுடன் தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் மாத இறுதியில் சட்டப் பேரவைத் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனையொட்டி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை நடத்துகிறார்.
சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.