ஈரோடு கிழக்கு தொகுதியில் தார் சாலைக்கான பூமி பூஜை: எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்
ஈரோடு கிழக்கு தொகுதியில் ரூ.1.76 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையில் பங்கேற்று எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் ரூ.1.76 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையில் பங்கேற்று எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூன்றாம் மண்டல பகுதியான எஸ்.கே.சி. ரோடு, பூசாரி சென்னிமலை வீதி பகுதியில் ரூ.1 கோடியே 76 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பில் புதிய தார்சாலை அமைக்கப்படுகிறது.
இதற்கான பூமி பூஜை இன்று நடந்தது. எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம், கே .எஸ். தென்னரசு ஆகியோர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையில் கலந்துகொண்டு பணியை தொடங்கி வைத்தனர்.
இதே போல் வீரப்பம்பாளையம் கரட்டாங்காடு பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதனையும் எம்.எல்.ஏ.க்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர். இதைத்தொடர்ந்து வீரப்பம்பாளையம் பள்ளியில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.எட்டு லட்சம் மதிப்பீட்டில் பிளவர் பிளாக் கற்கள் கொண்டு புதிய தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதனையும் எம்.எல்.ஏ.க்கள் திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் துணை மேயர் கே.சி. பழனிசாமி பகுதி செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், சூரம்பட்டி ஜெகதீஷ் கேசவமூர்த்தி, ஜெயராஜ், கோவிந்தராஜ், தங்கமுத்து, ராமசாமி, முருக சேகர், பெரியார் நகர் பகுதி அவைத்தலைவர் மீன் ராஜா, அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணைச் செயலாளர் மாதையன், சூரம்பட்டி தங்கவேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.