விஞ்ஞான முறைப்படி எதிரிகளை வீழ்த்த வேண்டும்: இளைஞர்களுக்கு பழனிசாமி வேண்டுகோள்
அதிமுக இளைஞர் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவினர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் சேரன்மகாதேவி தனியார் பொறியியல் கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது.
தமிழ்நாடுவிஞ்ஞான முறைப்படி எதிரிகளை வீழ்த்த வேண்டும்: இளைஞர்களுக்கு பழனிசாமி வேண்டுகோள்
அதிமுக இளைஞர் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவினர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் சேரன்மகாதேவி தனியார் பொறியியல் கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது.
அம்பாசமுத்திரம்: அதிமுக இளைஞர் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவினர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் சேரன்மகாதேவி தனியார் பொறியியல் கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் தமது உரையில், தகவல் தொழில்நுட்ப பிரிவு, இளைஞர் இளம்பெண்கள் பாசறை இரண்டும் வெற்றி வாய்ப்பிற்கு காரணமாக இருக்க வேண்டும். அரசின் திட்டங்களை மக்களுக்கு தகவல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எடுத்துரைத்து எதிரிகளை விஞ்ஞான முறைப்படி முறியடிக்க வேண்டும். ஸ்டாலின் பொதுக் கூட்டங்களில் அரசு எதுவும் செய்யவில்லை எனக் கூறி வருகிறார். அதனை முறியடிக்கும் வகையில் தகவல் தொழில்நுட்ப பிரிவினர் வியூகம் அமைத்துச் செயல்பட வேண்டும். இளைஞர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இளைஞர்கள் சந்திக்கும் முதல் தேர்தல் இது. இந்தத் தேர்தலில் தொகுதிக்கு 7,500 பேர் தகவல் தொழில்நுட்ப பிரிவினர் மற்றும் இளைஞர் பாசறையினர் உள்ளனர். அவர்கள் மக்களிடம் அரசின் திட்டங்களை சிறப்பாகக் கொண்டு சேர்க்க வேண்டும். 3.51 லட்சம் கோடி மதிப்பீட்டில் 304 தொழில்கள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதன் மூலம் 10 லட்சம் பேருக்கு நேர்முகமாகவும் மறைமுகமாகவும் வேலை கிடைக்கும்.
தென் மாவட்டங்களைத் தொழில்வளம் மிக்க மாவட்டமாக மாற்ற அரசுத் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. அதற்கு தொழில் மூதலீட்டாளர்களுக்கு பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இளைஞர்களாகிய நீங்கள் சந்திக்கும் முதல் தேர்தல் இது. எதிரிகளை தேர்தல் களத்தில் ஓட ஓட விரட்டி வெற்றிக்கு நீங்கள் பாடுபட வேண்டும். சாதிக்கவும், சாதனைகள் புரியவும் பிறந்தவர்கள் இளைஞர்கள். தமிழகம் மற்றும் இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கையில் தான் உள்ளது.
இளைஞர்கள் மூலம் அதிமுகவிற்கு புது ரத்தம் பாய்ச்சப் பட்டுள்ளது. இளைஞர்கள் எதிர்காலம் பிரகாசம் அடைய அதிமுக ஆட்சி மீண்டும் அமைய வேண்டும். அதற்கு இளைஞர்கள் அயராது பாடுபட வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.வி.உதயகுமார், வி.எம்.ராஜலட்சுமி, மாவட்ட செயலர் தச்சை கணேச ராஜா, சட்டமன்ற உறுப்பினர்கள் முருகையாபாண்டியன், இன்பதுரை, நாராயணன், அமைப்புச் செயலர்கள் கருப்பசாமிபாண்டியன், பி.எச்.பி. மனோஜ்பாண்டியன், சுதா கே.பரமசிவன், இசக்கி சுப்பையா, வி.கே.சீனிவாசன், மகளிரணி செயலர் விஜிலா சத்யானந்த், கொள்கைப் பரப்பு துணைச் செயலர் பாப்புலர் முத்தையா, நாராயணபெருமாள், இலக்கிய அணி மாவட்ட செயலர் மாடாசாமி, கல்லூர் வேலாயுதம், மதுரை மண்டல இளைஞர் பாசறை பொறுப்பாளர் ராஜ் சத்யன், ஒன்றியச் செயலர் விஜயபாலாஜி, நகரச் செயலர்கள் அறிவழகன், பழனி, கண்ணன், ராமையா, சங்கரநாராயணன், பார்வதி பாக்கியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.