தமிழ்நாடு

வாழப்பாடியில் ஜேசிஐ சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

DIN


வாழப்பாடி:  வாழப்பாடி ஜேசிஐ மெட்ரோ சங்கத்தின் 2021 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்றுக்கொண்டனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி ஜேசிஐ மெட்ரோ சங்கத்தின் 2021 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது

வாழப்பாடி ஜேசிஐ மெட்ரோ சங்கத்தின்  2021 ஆம் ஆண்டிற்கான புதிய தலைவராக விஜி பிரியா, செயலாளராக மோகன், பொருளாளராக ரமேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா, வாழப்பாடி அருகே கமலாலயம் குழந்தைகள் காப்பகம் வளாகத்தில் நேற்று புதன்கிழமை இரவு நடைபெற்றது.

இவ்விழாவிற்கு, வாழப்பாடி ஜேசிஐ மெட்ரோ உடனடி முன்னாள் தலைவர் ரமேஷ் பாபு தலைமை வகித்தார். நிகழாண்டு தலைவர் விஜிபிரியா வரவேற்றார். பட்டயத் தலைவர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டோர்.

ஜேசிஐ இயக்கத்தின் பன்னாட்டு துணைத்தலைவர் கவின்குமார், வட்டார தலைவர் ரோகித் குமார் லோதா, துணைத் தலைவர்கள் மணிகண்டன், மோகன்ராஜ், வாழப்பாடி அரிமா சங்க தலைவர் ஜவஹர், செயலாளர் பெ.பெரியார்மன்னன் ஆகியோர், புதிய நிர்வாகிகளை பதவியில் அமர்த்தி வாழ்த்துரை வழங்கினர்.

சர்வதேச துணைத்தலைவர் கவின்குமார் பேசுகையில்,' இளைஞர்கள் திறமைகள் மற்றும் , தலைமைப்பண்பை வளர்த்துக்கொள்ளவும், சமூக அங்கீகாரம் பெறவும், ஜேசிஐ போன்ற தன்னார்வ இயக்கங்களில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றார்.

வாழப்பாடி பாப்பான் ஏரியின் ஒருபகுதியை தூர்வாரி சீரமைத்தல். கைம்பெண்களுக்கு தொழிற்பயிற்சி அளித்தல். 50,000 விதைப்பந்துகள் தயாரித்து, தரிசு நிலங்களை மேம்படுத்துதல் ஆகிய சேவை திட்டப் பணிகளை நிறைவேற்ற புதிய நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிறைவாக துணைத்தலைவர் இளையரசன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT