தமிழ்நாடு

துறை வாரியாக ஆய்வு செய்யத் திட்டம்: புதுவை ஆளுநர் தமிழிசை

புதுவை துணைநிலை ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ள தமிழிசை சௌந்தர்ராஜன், புதுவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு, கரோனா தடுப்பூசி தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

DIN

புதுவை துணைநிலை ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ள தமிழிசை சௌந்தர்ராஜன், முதல் நாள் புதுவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு, கரோனா தடுப்பூசி தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இதனை அடுத்து வெள்ளிக்கிழமை முதலியார் பேட்டையில் உள்ள அங்கன்வாடி மையத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கிருந்த குழந்தைகளிடம் இனிப்பு வழங்கி பேசியவர், பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டார். அப்போது அவர் கூறியதாவது: 

புதுச்சேரியில் ஒவ்வொரு துறையாக நேரில் சென்று பார்வையிட்டு அதில் உள்ள குறைகளைச் சரிசெய்ய எனது அதிகாரத்துக்கு உட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு அங்கன்வாடி மையம் சிறப்பாகச் செயல்படுகிறது. மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பொதுவிநியோக திட்டத்தில் மக்களுக்கு அரிசி அல்லது தொகையாக வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தி மக்களுக்குத் தேவையானதைச் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

துறைகள் சார்ந்த கோரிக்கைகள் ஒவ்வொன்றாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். முக்கிய துறை துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 3 மணி நேரத்துக்கு புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை!

மதுரையில் தொடங்கியது உலகக் கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டி தொடர்!

இன்று மழை பெய்யவுள்ள மாவட்டங்கள்! சென்னையில் அதி கனமழைக்கு வாய்ப்பில்லை!

பாம்பன் பகுதியில் கடல் சீற்றம்: ராமேசுவரம் வட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 560 உயர்வு!

SCROLL FOR NEXT