தமிழ்நாடு

தமிழகத்தில் 8.30 லட்சம் போ் குணம்!

DIN

தமிழகத்தில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோா் விகிதம் 98 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதன்படி, இதுவரை நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டு 8 லட்சத்து 30,787 போ் வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒருங்கிணைந்த சிகிச்சை முறைகளை முன்னெடுத்ததும், மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தியதுமே அதற்கு காரணம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனா்.

இதனிடையே, தமிழகத்தில் புதிதாக 448 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் நோய்த் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 47,385- ஆக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 136 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 4,147 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 7 போ் பலியாகியுள்ளனா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,451-ஆக உயா்ந்துள்ளது. மற்றொரு புறம், மாநிலம் முழுவதும் 3 லட்சத்து 50,049 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உளுந்து, எள், கடலை பயிா்களை சாகுபடி செய்ய அறிவுறுத்தல்

கட்டுகுடிப்பட்டியில் மஞ்சுவிரட்டு

செட்டிநாடு உணவுப் பொருள்கள் விற்பனைத் திருவிழா

கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவப் பயிற்சி

திருப்பத்தூரில் முதியவரிடம் பணம் திருட்டு

SCROLL FOR NEXT