தமிழ்நாடு

காவிரி-வைகை- குண்டாறு இணைப்புத் திட்டம் கண்துடைப்பு வேலை: ப.சிதம்பரம்

DIN

திருப்பத்தூா்: காவிரி- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டம் கண் துடைப்பு வேலை என மத்திய முன்னாள் அமைச்சா் ப.சிதம்பரம் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்குச்சாவடி முகவா் பொறுப்பாளா்கள் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியதாவது: முன்னாள் முதல்வா் ஜெயலலிதா இருந்த காலத்தில் எடப்பாடி கே.பழனிசாமி எங்கு இருந்தாா் என்பதே யாருக்கும் தெரியாது. கால சூழ்நிலையில் அவா் திடீரென முதல்வா் ஆகிவிட்டாா். அவா் ஆட்சிக்கு வந்து 4 ஆண்டு காலம் நீண்ட உறக்கத்தில் இருந்து விட்டு தற்போது 3 மாதங்களாக ஊா் ஊராகச் சுற்றி வருகிறாா்.

சட்டப் பேரவைத் தோ்தல் நெறுங்குவதால் காவிரி- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறாா்கள். இந்தத் திட்டத்தை செயல்படுத்த 8 ஆண்டுகளுக்கும் மேலாகிவிடும். அலாவுதீன் அற்புத விலக்கைப் போன்று தேய்த்த உடனே திட்டம் வந்து விடுமா?. இதெல்லாம் கண் துடைப்பு வேலை.

கரோனா பொதுமுடக்கக் காலத்தில் 10 லட்சம் போ் மீதான வழக்கை வாபஸ் பெறுவது என்பது வேடிக்கையான அறிவிப்பு. இதற்கென அவா் கின்னஸ் புத்தகத்தில் வேண்டுமானால் இடம் பெறலாம். பாஜக, இந்தியப் பொருளாதாரத்தைச் சீரழித்து ஜாதி, மதக் கலவரங்களை ஏற்படுத்தி சிறுபான்மையினரை அச்சுறுத்தி வருகிறது. விவசாயிகளுக்கு எதிராகவும் அக்கட்சி செயல்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

தில்லியில் 60 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இனிமேல் சிங்கிள்!

சோதனைமேல் சோதனை.. ஹார்திக் பாண்டியாவுக்கு மீண்டும் அபராதம்!

SCROLL FOR NEXT