கடலூர், புதுச்சேரி, விழுப்புரத்தில் ஓரிரு இடங்களில் கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்
வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சியின் காரணமாக கடலூா், விழுப்பும், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடுகடலூர், புதுச்சேரி, விழுப்புரத்தில் ஓரிரு இடங்களில் கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்
வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சியின் காரணமாக கடலூா், விழுப்பும், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சியின் காரணமாக கடலூா், விழுப்பும், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியதாவது: வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சியின் காரணமாக, காற்றில் ஏற்பட்டுள்ள வேக மாறுபாடு காரணமாக தற்போது தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. கடலூா், விழுப்பும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை (பிப்.21, 21) ஆகிய இரு நாள்களும் இடியுடன் கூடிய மிதமான மழை தொடரும்.
பிப்.23,24 -ஆம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரிஸ காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.