விபத்தில் பலியான பால் வியாபாரி அழகுமலை. 
தமிழ்நாடு

கம்பத்தில் மோட்டார் பைக் மரத்தில் மோதி பால் வியாபாரி பலி

தேனி மாவட்டம் கம்பத்தில் மோட்டார் பைக்கில் சென்ற பால் வியாபாரி மரத்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

DIN

கம்பம்:  தேனி மாவட்டம் கம்பத்தில் மோட்டார் பைக்கில் சென்ற பால் வியாபாரி மரத்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தேனி மாவட்டம்  ராயப்பன்பட்டி ஒத்தக்கடையைச் சேர்ந்தவர் அழகுமலை ( 27), பால் வியாபாரம் செய்து வருகிறார். 

இவர் சனிக்கிழமை  இரவு கம்பம் புதிய பேருந்து  நிலையத்திலிருந்து காமயகவுண்டன் பட்டி சாலை வழியாக ராயப்பன் பட்டிக்கு மோட்டார் பைக்கில் சென்றார். 

அப்போது தனியார் பள்ளி பின்புறம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அப்பகுதியில் போதிய வெளிச்சம் இல்லாததால் சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் திடீரென்று மோதினார். 

இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அழகுமலை உயிரிழந்தார். 

அந்த வழியாக வந்தவர்கள் விபத்து குறித்து கம்பம் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அழகுமலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT