திருக்கானூர்பட்டியில் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கியது 
தமிழ்நாடு

தஞ்சாவூர் அருகே  திருக்கானூர்பட்டியில் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கியது

தஞ்சாவூர் அருகே திருக்கானூர்பட்டியில் புனித அந்தோணியார் பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது.

DIN

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே திருக்கானூர்பட்டியில் புனித அந்தோணியார் பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது.

இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் ம. கோவிந்த ராவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் கோட்டாட்சியர் எம். வேலுமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஏறத்தாழ 250 காளைகள் வரப்பெற்றதைத் தொடர்ந்து, அவற்றை கால்நடை பராமரிப்புத் துறை மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து பட்டியிலிருந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டு வருகிறது. இதில் விடுவதற்காக ஏறத்தாழ 600 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவற்றைப் பிடிப்பதற்காக சுமார் 400 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்களில் முதல் கட்டமாக 50 வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இதில் வெற்றி பெறுபவர்களுக்கு சில்வர் பாத்திரங்கள், சைக்கிள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போவோமா ஊர்கோலம்... அஹானா கிருஷ்ணா!

மரகதப் பறவை... பிரணிதா சுபாஷ்!

உனக்காக என் மனைவியைக் கொன்றேன்! பல பெண்களுக்கு அனுப்பிய பெங்களூரு டாக்டர்!!

TVK Vijay full speech - முதல்வருக்கு சில கேள்விகள்! | TVK | Vijay

இதையெல்லாம் நம்பாதீங்க... ராஜாசாப் படக்குழு அறிக்கை!

SCROLL FOR NEXT