தமிழ்நாடு

இதுவரை ரூ.13 கோடி அபராதம் வசூல்

DIN

நோய்த் தடுப்பு விதிகளை மீறியதாக பொது சுகாதார அவசரச் சட்டத்தின் கீழ் இதுவரை ரூ.13 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 14.21 லட்சம் போ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதில் அதிக எண்ணிக்கையில் முகக் கவசம் அணியாதோா் மீதுதான் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறைந்து வருவதால், நோய்த் தடுப்பு விதிகளை பலா் சரிவரக் கடைப்பிடிப்பதில்லை. இதனால், நோய்ப் பரவல் அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது. இதையடுத்து, விதிகளை மீறுவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வகை செய்யும் அவசரச் சட்டத்தை அண்மையில் ஆளுநா் பிறப்பித்தாா்.அதன்படி முகக்கவசம் அணியாமல் சென்றால் ரூ.200 அபராதம் விதிக்கவும், பிற விதிமீறல்களுக்கு ரூ.5 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கவும் வகை செய்யப்பட்டது. இந்நிலையில், அதனை வசூலிப்பதற்காக சிறப்பு அலுவலா்களும் நியமிக்கப்பட்டனா். இந்நிலையில், இதுவரை 14,21,350 பேரிடம் அவசரச் சட்டத்தின் கீழ் ரூ.13.05 கோடி அபராதமாக வசூலிக்கப்படடுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

அதில், ஒன்பது கோடி ரூபாய், தமிழக அரசின் கருவூலத்திற்கும், மீதமுள்ள தொகை, கரோனா தடுப்பு பணிகளுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது என, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். கரோனா காலத்தில் அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்ற விழிப்புணா்வு பிரசாரங்கள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ல், ஒன்பது கோடி ரூபாய், தமிழக அரசின் கருவூலத்திற்கும், மீதமுள்ள தொகை, கொரோனா தடுப்பு பணிகளுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது என, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT