தமிழ்நாடு

பேரவையில் உருவப் படங்கள் திறப்பு: கரோனா பரிசோதனை கட்டாயம்

DIN

சட்டப் பேரவையில் மூன்று தலைவா்களின் உருவப் படங்கள் திறக்கப்படும் நிகழ்ச்சியில் பங்கேற்போருக்கும் கரோனா நோய்த்தொற்றுப் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வ.உ.சிதம்பரனாா், ப.சுப்பராயன் மற்றும் ஓமந்தூா் ராமசாமி ஆகியோருக்கு பேரவையில் வரும் 23-ஆம் தேதியன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் உருவப் படங்கள் திறக்கப்பட உள்ளன. தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் உருவப் படங்களை முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி திறந்து வைக்கிறாா்.

கரோனா பாதிப்பு: கரோனா பாதிப்பு காரணமாக, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்போருக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கரோனா பரிசோதனை செய்து, நோய்த்தொற்று இல்லை என்பது உறுதியான பிறகே, நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் நிகழ்ச்சி நடைபெறவுள்ளதால் மிகக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT