திருச்செந்தூரில் மாசித்திருவிழா 7-ம் நாள்: வெட்டிவேர்ச் சப்பரத்தில் சண்முகர் 
தமிழ்நாடு

திருச்செந்தூரில் மாசித்திருவிழா 7-ம் நாள்: வெட்டிவேர்ச் சப்பரத்தில் சண்முகர்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித்திருவிழா ஏழாம் நாளான செவ்வாய்க்கிழமை காலை சுவாமி சண்முகர் வெட்டி வேர்ச் சப்பரத்தில் எழுந்தருளினார்.

DIN

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித்திருவிழா ஏழாம் நாளான செவ்வாய்க்கிழமை காலை சுவாமி சண்முகர் வெட்டி வேர்ச் சப்பரத்தில் எழுந்தருளினார்.

இக்கோயிலில் மாசித்திருவிழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் நாள்தோறும் சுவாமி, அம்மன் காலை, மாலை வேளைகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். முக்கிய திருநாளான செவ்வாய்க்கிழமை ஏழாம் திருவிழாவை முன்னிட்டு, கோயில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. 

காலை 4.30 மணியளவில் அருள்மிகு சண்முகப்பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து 8.30 மணிக்கு ஆறுமுருகப்பெருமான் வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளி பக்த பெருமக்களுக்கு ஏற்ற தரிசனம் அருளி பிள்ளையன்கட்டளை மண்டபத்தைச் சேர்ந்தார். நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய ரயில்வேயின் முதல் தனியார் ரயில் சேவை! டிக்கெட் விலை உள்ளிட்ட முழு விவரம்!!

சென்னை சென்ட்ரல் செல்லும் 3 ரயில்கள் 12 மணி நேரம் தாமதமாகப் புறப்பாடு!

ஆளப் பிறந்தவள்... அஹானா கும்ரா!

மழை அளவு கணக்கெடுப்பு நேரத்தில் மாற்றமா?

வியத்நாமில் வரலாறு காணாத கனமழை! வெள்ளத்தில் மூழ்கிய பாரம்பரிய இடங்கள்!

SCROLL FOR NEXT