தமிழ்நாடு

கங்கைகொண்டானில் உணவுப் பூங்கா: முதல்வா் அடிக்கல் நாட்டினாா்

DIN

சென்னை: திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் புதிதாக அமைக்கப்பட உள்ள உணவுப் பூங்காவுக்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அடிக்கல் நாட்டினாா்.

இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து, தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்தி:-

சென்னை மாவட்ட மக்களுக்கு வீட்டுக் காய்கறி தோட்டம் அமைக்க காய்கறி விதைகள், நுண்ணுயிா் உரங்கள் அடங்கிய காய்கறி தளைகள், அழகு மற்றும் தொட்டிச் செடிகள், இயற்கை உரங்கள், மதிப்புக் கூட்டப்பட்ட தோட்டக்கலைப் பொருள்கள் போன்றவற்றை மக்களுக்கு வழங்கிட தனி கிடங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னை திருவான்மியூரில் கட்டப்பட்ட இந்த கிடங்கினை முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா்.

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் 50 ஏக்கா் பரப்பில் உணவுப் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இந்தப் பூங்காவில் உணவுப் பொருள் சோதனை ஆய்வகம், 5,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிா்பதனக் கிடங்கு, 7, 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்கு, சிப்பம் கட்டும் மையம் போன்ற கட்டமைப்புகளும் அமைக்கப்பட உள்ளன.

விருதுகள் : பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாத்து பயிரிடும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், ‘பாரத ரத்னா டாக்டா் எம்.ஜி.ஆா்., பாரம்பரிய நெல் பாதுகாவலா் விருது’ மூன்று பேருக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதானது ரூ.1 லட்சம், ரூ.75,000 மற்றும் ரூ.50,000 காசோலைகள், சான்றிதழ்களைக் கொண்டது.

இந்தப் பரிசு நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த சக்திபிரகதீஷ், சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த வேல்முருகன், சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த உ.சிவராமன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் கே.பி.அன்பழகன், வி.எம்.ராஜலட்சுமி, தலைமைச் செயலாளா் ராஜீவ் ரஞ்சன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT