முகப்பு
தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் ரூ.18.66 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூபாய் 18.66 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:37 PM
பகிர்:

சென்னை விமான நிலையத்தில் ரூபாய் 18.66 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த உளவுப்பிரிவு தகவலின் அடிப்படையில் துபையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் சென்னை வந்து இறங்கிய ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது நஷீஃப், 21, என்ற பயணியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

அவரது பையில் இருந்த அட்டைப் பெட்டிகளை திறந்து பார்த்தபோது அவற்றுக்குள் ஃபேன் ஹீட்டர் மற்றும் ஃபேஷியல் நேனோ ஸ்டீமர் ஆகிய கருவிகள் இருந்தது கண்டறியப்பட்டது.

அவற்றை திறந்து பார்த்தபோது 389 கிராம் எடையிலான தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 18.66 லட்சம் ஆகும். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →