மாசி மகம்: மாமல்லபுரம் கடற்கரையில் கருட சேவை 
தமிழ்நாடு

மாசி மகம்: மாமல்லபுரம் கடற்கரையில் கருட சேவை

மாசி மகத்தையொட்டி மாமல்லபுரம் கடற்கரையில் கருட சேவையில் எழுந்தருளி தலசயன பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

DIN

மாசி மகத்தையொட்டி மாமல்லபுரம் கடற்கரையில் கருட சேவையில் எழுந்தருளி தலசயன பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்து கடலில் நீராடி மகிழ்ந்தனர். 

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்திலுள்ள தலசயனப் பெருமாள் கோயிலில் 108 வைணவ திருத்தலங்களில் 63-வது வைணவத் தலமாக மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோவில் விளங்குகிறது. 

இக்கோயிலில் மாசி மகத்தையொட்டி வெள்ளிக்கிழமை இரவு கடற்கரைச் சாலையில் உள்ள புண்டரீக புஷ்கரணி திருக்கோலத்தில் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் அலங்காரத்தில் பவனி வந்து பக்தர்களுக்குக் காட்சி அளித்தார் உலகத்தைச் சுற்றி நின்ற பக்தர்கள் கற்பூர ஆராதனை காட்டி பெருமாளை வழிபட்டனர். 

இவ்விழாவைத் தொடர்ந்து சனிக்கிழமை காலையும் அருள்மிகு தலசயன பெருமாள் மற்றும் வராக பெருமாள் ஆகிய உற்சவர்கள் சிறப்பு அலங்காரத்தில் கருட சேவையில் ஊர்வலமாக வந்து கடற்கரையில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தனர். அப்போது கடற்கரையில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. பிறகு தலசயன பெருமாளுக்கு புனித நீராட்டு விழா நடந்தது.

அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துவிட்டு சாவாமி. புனித நீராடிய கடலில் புனித நீராடி மகிழ்ந்தனர். மாசி மகத்தன்று மாமல்லபுரம் கடலில் நீராடினால் காசி ராமேஸ்வரத்தில் நீராடிய புண்ணியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. விழாவை முன்னிட்டு தலசயன பெருமாள் கோயில் வளாகத்தில் குலசேகர ஆழ்வார் ராமானுஜர் கூட சார்பில் அதன் தலைவர் நெய்குப்பி கிருஷ்ண ராமானுஜதாசர் தலைமையில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு சர்க்கரைப் பொங்கல் தயிர்ச்சாதம் கதம்ப சாதம் உள்ளிட்ட அன்னதானம் வழங்கப்பட்டது.

மாசி மக பௌர்ணமியையொட்டி தெப்பல் விழா மற்றும் தீர்த்தவாரி திருவிழாவைக் கண்டு அளிப்பதற்காக பல்வேறு ஊர்களிலிருந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வெள்ளிக்கிழமையே மாமல்லபுரம் வந்து தங்கி தெப்பல் திருவிழாவையும் தீர்த்தவாரி உற்சவம் கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

விழாவையொட்டி மாமல்லபுரம் கடற்கரை மற்றும் புண்டரீக புஷ்கரணி திருக்குளம் அருகில் மாமல்லபுரம் காவல்துறை ஆய்வாளர் வடிவேல் முருகன் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோயில் செயல் அலுவலர் எஸ் சங்கர் கோயில் பணியாளர்கள் பட்டாச்சாரியார்கள் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாகை: 7 மாதங்களில் ரூ.1.84 கோடி ரேஷன் பொருள்கள் பறிமுதல்

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

மீஞ்சூரில் ஆக.6-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

SCROLL FOR NEXT