அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு தொடங்கியது
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, பாஜக இடையிலான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை கிண்டியிலுள்ள தனியார் விடுதியில் நடைபெற்று வருகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, பாஜக இடையிலான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை கிண்டியிலுள்ள தனியார் விடுதியில் நடைபெற்று வருகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர் செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்தப் பேச்சுவார்த்தையில் பாஜக மூத்த நிர்வாகிகள் மற்றும் அதிமுக மூத்த நிர்வாகிகள் பங்கெடுத்துள்ளனர்.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பாமவுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களைக் காட்டிலும் கூடுதலான இடங்களே பாஜக தரப்பில் கேட்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொகுதிப் பங்கீடு குறித்த இறுதி முடிவு நாளை (திங்கள்கிழமை) எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.