தமிழ்நாடு

விழுப்புரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு: அமைச்சர் சிவி சண்முகம் வழங்கி தொடங்கி வைத்தார்

DIN


விழுப்புரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்புகளை தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் வழங்கி தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் வரும் பொங்கல் பண்டிகைக்காக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 ரொக்கம் மற்றும் கரும்பு, சக்கரை, ஏலக்காய், திராட்சை உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படுகிறது.

இந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் 5.86 லட்சம் லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசு தொகுப்புகள் வழங்கப்படுகிறது.

விழுப்புரம் பகுதியில் வெள்ளிக்கிழமை தொடங்கிய நிகழ்ச்சியில் அமைச்சர் சிவி சண்முகம் பங்கேற்று பொங்கல் பரிசு தொகுப்புகளை பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் சரஸ்வதி மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து இன்று முதல் நியாயவிலைக் கடைகளில் பரிசுத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக மாவட்டத்தில் ரூ.156 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலை காதல், என்றென்றும்...!

சுழல், வேகப்பந்துகளை அட்டகாசமாக விளையாடும் சஞ்சு சாம்சன்!

கேஜரிவால் இடைக்கால ஜாமீன் வழக்கில் வெள்ளிக்கிழமை உத்தரவு

வாக்கு வங்கியை காத்துக்கொள்ள போராடுகிறது காங்கிரஸ்: அமித் ஷா

நடிகர் சத்யராஜும் 'ஆவேச’ குழந்தையும்!

SCROLL FOR NEXT