தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப்படகில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1000 கிலோ விரலி மஞ்சள் பறிமுதல் செய்து தூத்துக்குடி வடபாகம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இலங்கையில் விராலி மஞ்சளுக்கு மிக தட்டுபாடு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இலங்கையில் விராலி மஞ்சள் டன் ஒன்றிற்கு ரூ 10 ஆயிரம் வரை அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் மஞ்சள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக இலங்கையில் மஞ்சளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக தமிழக கடற்கரை வழியாக இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து தமிழக காவல்துறையினர், கடலோர காவல்படை கடற்கரையோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் தூத்துக்குடி வடபாகம் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுப்பட்டு இருந்தபோது தூத்துக்குடி மாவட்டம் சிப்பிகுளத்தை சேர்ந்த பிச்சையா வாஸ் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1000 கிலோ மஞ்சளை பறிமுதல் செய்த காவல்துறையினர் இலங்கைக்கு கடத்தப்பட இருந்ததா, கடத்தலில் ஈடுபட உள்ள நபர் யார் என்பது குறித்து தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு உள்ளனர்.
இது தொடர்பாக தூத்துக்குடியைச் சேர்ந்த மீராசா என்பவரை பிடித்து வடபாகம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.