தமிழகத்தில் புதிதாக 820 பேருக்கு கரோனா
தமிழகத்தில் புதிதாக 820 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 820 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இன்றைய அறிவிப்பில் புதிதாக 820 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 971 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 11 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,22,370 ஆக உயர்ந்துள்ளது. இதில் 8,02,385 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர், 12,177 பேர் பலியாகியுள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று 235 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் மொத்தம் 7,808 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.