மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடுமேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1500 கன அடிக்கு குறைவாகவே நீர்வரத்து உள்ளது.
இந்த நிலையில் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் பாசனத் தேவை காரணமாக வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதுபோல கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தற்போது காவிரி டெல்டா பாசனப் பகுதியில் லேசான மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 500 கன அடியாக குறைக்கப்பட்டு உள்ளது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 104.94 அடியாக உள்ளது.
நீர்இருப்பு : 71.391 டி.எம்.சி.
நீர் வரத்து : வினாடிக்கு 1,269 கன அடி.
வெளியேற்றம் : டெல்டா பாசனத் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.