சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 2,359 ஆகக் குறைந்தது
சென்னையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி கரோனா பாதித்து 2,359 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனா பாதித்து பலியானவர்களின் எண்ணிக்கை 4,025-ஐ எட்டியது.
சென்னை: சென்னையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி கரோனா பாதித்து 2,359 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனா பாதித்து பலியானவர்களின் எண்ணிக்கை 4,025-ஐ எட்டியது.
சென்னையில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,26,456 ஆக உள்ளது. இவர்களில் 2,20,072 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது சென்னையில் கரோனா பாதித்தவர்களில் 2,359 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
நல்ல செய்தியாக, அனைத்து மண்டலங்களிலும் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 400-க்கும் கீழ் குறைந்துள்ளது. அதிகபட்சமாக, கோடம்பாக்கத்தில் 321 பேர் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தேனாம்பேட்டையில் இதுவரை கரோனாவுக்கு 505 பேர் பலியாகியுள்ளனர். அண்ணாநகரில் 24,141 பேர் குணமடைந்துள்ளனர்.
கரோனா பாதிப்பு.. மண்டலவாரியாக..