தமிழ்நாடு

குடிநீர் கோரி கூடலூர் நகராட்சி அலுவலகம் முற்றுகை

DIN

தேனி மாவட்டம் கூடலூர் 20ஆவது வார்டு பொதுமக்கள் குடிநீர் வழங்கக் கோரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சி பகுதியில் கடந்த சில நாள்களாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. லோயர் கேம்பில் இருந்து கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் நகராட்சி பகுதிகளுக்குக் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. தற்போது குடிநீர் குழாய்களில் அடிக்கடி ஏர் லாக் உண்டாவதால் குடிநீர் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டது.

குடிநீர் சரிவர கிடைக்கவில்லை என்று பலமுறை புகார் கூறியும் கண்டு கொள்ளாத பொறியியல் பிரிவு அதிகாரிகளைக் கண்டித்து புதன்கிழமை 20 ஆவது வார்டு ராஜீவ்காந்தி நகரைச்சேர்ந்த ஆண் பெண் பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

15 நாள்களாக குடிநீர் வரவில்லை, மாற்று ஏற்பாடாக ஆழ்குழாய் கிணறு தண்ணீரும் இல்லை என்று கூறி கோஷமிட்டனர், நகராட்சி அலுவலர்கள் முற்றுகையிட்ட பொதுமக்களை சந்தித்து, பைப்லைன் உடைந்து இருப்பதால் விரைவில் சரி செய்யப்பட்டு தண்ணீர் வினியோகம் செய்யப்படும், தற்போது உடனடியாக வாகனம் மூலம் குடிநீர் வினியோகம் செய்வதற்கு ஏற்பாடுகளைச் செய்வதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தைக் கைவிட்டுத் திரும்பச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீலகிரியில் மே 10ல் உள்ளூர் விடுமுறை!

பிறந்தநாளில் இப்படியொரு போஸ்டரா? கவனம் ஈர்த்த அப்புக்குட்டி!

ஆம்பூர் அருகே கோழிப்பண்ணையில் தீ: 5000 கோழிகள் பலி - ரூ.10 லட்சம் இழப்பு

பேருந்தில் தீ: 4 வாக்கு இயந்திரங்கள் நாசம்!

காங்கிரஸ் தலைமைக்கு ரே பரேலி மீண்டும் தயார்: பிரியங்கா

SCROLL FOR NEXT