தமிழ்நாடு

தமிழகத்தில் பள்ளிகளை திறக்க 70% பெற்றோர் கோரிக்கை?

DIN

சென்னை: தமிழகத்தில் பள்ளிகளை திறக்க 70% பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கரோனா தொற்று அச்சத்தின் காரணமாக கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக தமிழகம் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

தற்போது பொங்கலுக்குப் பின்னர் பள்ளிகளைத் திறப்பது தொடர்பாக வியாழனன்று பெற்றோர்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை முன்னரே அறிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க 70% பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி,’ தமிழகத்தில் பள்ளிகளை திறக்க 70% பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர் என்றும், 10, 12-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நெருங்குவதால் நேரில் பயிற்றுவிக்க வேண்டிய அவசியமுள்ளதாக பெற்றோர்கள் கருத்து கூறியுள்ளதாக’ தெரிவிக்கப்பட்டுள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

தாக்கப்பட்ட மாணவர்... +2 தேர்வில் அசத்திய நான்குனேரி சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

SCROLL FOR NEXT