சேலம்: அரசுப் பள்ளியில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முதல்வர் வீட்டின் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீரென திரண்டனர்.
பகுதிநேர ஆசிரியர்கள் தங்களது வாழ்வாதாரத்தை காத்திட நெடுங்காலமாக பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்:
அதேபோல சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், தங்களுக்கு பணி வழங்கக்கோரி முதல்வர் வீட்டின் முன்பு கோரிக்கை அடங்கிய விளம்பர பதாகையை ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் திருவகவுண்டனூர் பகுதியில் உள்ள முதல்வர் வீட்டு முன்பு அரசு பள்ளியில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரிக் மனு கொடுக்க காத்திருக்கும் ஆசிரியர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.