முகப்பு
தமிழ்நாடு

இப்படியும் ஏமாற்றலாம்.. உஷார்!

வால்லெட்டில் பணம் அனுப்புவதாகக் கூறி மோசடியாளர்கள் ஏமாற்றலாம் என்று அடையாறு காவல்துறை துணை ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
இப்படியும் ஏமாற்றலாம்.. உஷார்!
பகிர்:

வால்லெட்டில் பணம் அனுப்புவதாகக் கூறி மோசடியாளர்கள் ஏமாற்றலாம் என்று அடையாறு காவல்துறை துணை ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அந்த எச்சரிக்கை செய்தியில்,  யாரேனும் உங்களுக்கு வால்லெட் மூலம் பணம் அனுப்புவதாகவும்  அதற்கு க்யூஆர் கோட்-ஐ ஸ்கேன் செய்யுமாறு கூறினால் கவனம். உங்கள் பணம் மோசடி செய்யப்பட்டலாம். 

பணம் பெறுவதற்கு நீங்கள் க்யூஆர்  ஸ்கேன் செய்யவோ பாஸ்வேர்ட் அளிக்கவோ தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.

மோசடி.. இதற்குத்தான் எத்தனை வழிகள். ஒரு மோசடியிலிருந்து தப்புவிக்க வழியைக் கண்டுபிடிப்பதற்குள் அடுத்த மோசடி கிளம்பிவிடுகிறது.

தொழில்நுட்பம் வளர வளர மோசடிகளும் வளர்ந்து கொண்டே போகிறது. இதனால் அப்பாவிகளும், ஏழைகளும் தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த சின்னஞ்சிறு தொகைகளைக் கூட இழக்க நேரிடுகிறது.

பெற்றவர்களுக்கு அது வெறும் பணம். ஆனால் இழந்தவர்களுக்கோ, அது அவர்களது மருத்துவச் செலவுக்கான பணமாகவோ, கல்விச் செலவாகவோ, திருமணத்துக்கான வரதட்சிணையாகவோ இருக்கலாம். அந்த இழப்புகளால் அவர்கள் அடையும் இன்னல்களும் ஏராளமானதாக இருக்கும்.

ஒவ்வொரு மோசடி குறித்தும் காவல்துறையினரும் தங்களால் இயன்ற அளவுக்கு எச்சரிக்கைகளைக் கொடுத்துக் கொண்டுதானிருக்கிறார்கள். ஆனால் மோசடியாளர்கள் ஏமாந்த சமயத்தில் அல்லவா தங்களது கைவரிசையைக் காட்டுகிறார்கள்.

எனவே மக்களே உஷார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →