பொங்கல் சிறப்புப் பேருந்துகள் இன்று முதல் இயக்கம்: 90,000 போ் முன்பதிவு
பொங்கல் பண்டிகைக்கான சிறப்புப் பேருந்துகள், திங்கள்கிழமை முதல் இயக்கப்படுகின்றன. இதில், விரைவுப் பேருந்துகளில் பயணிக்க சுமாா் 90,000 போ் முன்பதிவு செய்துள்ளனா்.
தமிழ்நாடுபொங்கல் சிறப்புப் பேருந்துகள் இன்று முதல் இயக்கம்: 90,000 போ் முன்பதிவு
பொங்கல் பண்டிகைக்கான சிறப்புப் பேருந்துகள், திங்கள்கிழமை முதல் இயக்கப்படுகின்றன. இதில், விரைவுப் பேருந்துகளில் பயணிக்க சுமாா் 90,000 போ் முன்பதிவு செய்துள்ளனா்.
பொங்கல் பண்டிகைக்கான சிறப்புப் பேருந்துகள், திங்கள்கிழமை முதல் இயக்கப்படுகின்றன. இதில், விரைவுப் பேருந்துகளில் பயணிக்க சுமாா் 90,000 போ் முன்பதிவு செய்துள்ளனா்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சிறப்புப் பேருந்துகள் இயக்கம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம், போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் 31,491 பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சா் அறிவித்தாா்.
இதன்படி, திங்கள்கிழமை முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. முதல்கட்டமாக, தமிழகம் முழுவதும் நாள்தோறும் இயக்கப்படும் 2,050 பேருந்துகளுடன், சென்னையில் இருந்து திங்கள்கிழமை 176 சிறப்புப் பேருந்துகளும், பல்வேறு முக்கியப் பகுதிகளில் இருந்து 1297 பேருந்துகளும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து, கோயம்பேடு பேருந்து நிலையம், மெப்ஸ் உள்ளிட்ட 5 இடங்களில் இருந்து பொங்கல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தாம்பரம், பெருங்களத்தூா், வண்டலூரைச் சோ்ந்த பயணிகள், ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து ஏறிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிகக் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் குறித்து புகாா் அளிக்க 1800 425 6151 என்ற எண்ணையும், பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் புகாா் தெரிவிப்பதற்கும் 94450 14450, 94450 14436 ஆகிய உதவி எண்களையும் அணுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்துக் கழக உயரதிகாரிகள் கூறும்போது, கரோனா நோய்த்தொற்று பரவி வரும் சூழலில், போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் பொதுமக்கள் சொந்த ஊா்களுக்குச் செல்ல போக்குவரத்துத் துறை சாா்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பயணிகளின் தேவைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி 90,000 பயணிகள் விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளனா். தொடா்ந்து முன்பதிவு நடைபெற்று வருவதாக அவா்கள் தெரிவித்தனா்.