ஆண்டிபட்டி ஏடிஎம் மையத்தில் நடைபெற்ற கொள்ளை முயற்சியில் சிசிடிவியில் பதிவான காட்சி 
தமிழ்நாடு

ஆண்டிபட்டி ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில்  சனிக்கிழமை இரவு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து மர்ம நபர்கள் திருட முயற்சி செய்த சம்பவம் குறித்து காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

DIN

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில்  சனிக்கிழமை இரவு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து மர்ம நபர்கள் திருட முயற்சி செய்த சம்பவம் குறித்து காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

ஆண்டிபட்டி நகர்  தேனி - மதுரை சாலையில் சக்கம்பட்டியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் அடுத்தடுத்து மூன்று ஏடிஎம் மையங்கள் அமைந்துள்ளது. இதில் பாரத் ஸ்டேட் பேங்க் (எஸ்பிஐ)  வங்கியின் ஏடிஎம் மையமும்  உள்ளது.

இந்நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு 2 மணி அளவில் எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் நுழைந்த மர்ம நபர்கள் அங்கு இருந்த இயந்திரத்தை கம்பியால் உடைக்க முயற்சி செய்துள்ளனர். இதில் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதை கண்ட மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். 

இதுகுறித்து கிடைத்த தகவலின் படி, ஆண்டிபட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் தங்க கிருஷ்ணன் தலைமையில் காவலர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகியுள்ள தடயங்களை சேகரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

SCROLL FOR NEXT