பொள்ளாச்சி செல்ல தடை: கோவையில் கனிமொழி எம்.பி மறியல்
பொள்ளாச்சி செல்ல விடாமல் காவலர்கள் தடுத்து நிறுத்தியதால், கோவை அருகே கனிமொழி எம்.பி தலைமையில் காவல் துறையினரை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடுபொள்ளாச்சி செல்ல தடை: கோவையில் கனிமொழி எம்.பி மறியல்
பொள்ளாச்சி செல்ல விடாமல் காவலர்கள் தடுத்து நிறுத்தியதால், கோவை அருகே கனிமொழி எம்.பி தலைமையில் காவல் துறையினரை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவை: பொள்ளாச்சி செல்ல விடாமல் காவலர்கள் தடுத்து நிறுத்தியதால், கோவை அருகே கனிமொழி எம்.பி தலைமையில் காவல் துறையினரை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள அதிமுகவினர் உள்பட அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்தும் 10 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பொள்ளாச்சியில் திமுக மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, ,பொள்ளாச்சி செல்வதற்காக ஞாயிற்றுக்கிழமை காலை கோவையில் இருந்து காரில், கட்சி நிர்வாகிகளுடன் கனிமொழி சென்று கொண்டிருந்தார். அப்போது ஈச்சனாரி, கற்பகம் கல்லூரி அருகே கனிமொழியின் காரை தடுத்து நிறுத்திய காவல் துறையினர், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க பொள்ளாச்சி செல்ல விடாமல் தடுத்தனர். இதனால், காவல் துறையினருக்கும், திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து கோவை - பொள்ளாச்சி சாலை கற்பகம் கல்லூரி அருகே கனிமொழி தலைமையில் கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தென்றல் செல்வராஜ் உள்பட 50 க்கும் மேற்பட்ட திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.