நாகூர் ஆண்டவர்  தர்கா கந்தூரி விழா தொடக்க நிகழ்வாக, தர்கா முகப்பில் பெரிய மனோராவில் ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்றப்பட்ட கொடிமரம். 
தமிழ்நாடு

நாகூர் தர்கா 464 -ஆம் ஆண்டு கந்தூரி விழா: மனோராக்களில் கொடிமரம் ஏற்றம்

நாகூர் ஆண்டவர் தர்காவின் கந்தூரி விழாவையொட்டி, தர்கா மனோராக்களில் கொடிமரம்(பாய்மரம்) ஏற்றும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது,

DIN

 
நாகப்பட்டினம்: நாகூர் ஆண்டவர் தர்காவின் கந்தூரி விழாவையொட்டி, தர்கா மனோராக்களில் கொடிமரம்(பாய்மரம்) ஏற்றும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது,

உலகப் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் நாகூர் ஆண்டவர் தர்காவின் 464- ஆம் ஆண்டு கந்தூரி விழா ஜனவரி 14- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, ஜனவரி 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  இவ்விழாவை முன்னிட்டு தர்காவின் பாரம்பரிய முறைப்படி, கந்தூரி விழா கொடியேற்றத்துக்கு முன்பாக  நடைபெறும் பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு,  தர்காவில் அதிகாலை முதல் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னர், தர்காவின் பரம்பரை கலிபா கே.எம். கலிபா மஸ்தான் சாகிபு  தூ ஆ செய்து  காலை 6} மணிக்கு தர்காவில் பள்ள சாகிபு மனோராவில் பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.  

அதையடுத்து  தர்கா முகப்பில் உள்ள பெரிய மனோரா, தலைமாட்டு மனோரா, முதுபக் மனோரா, ஓட்டு மனோராக்களிலும் பாய்மரம் ஏற்பட்டது. 

நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு  சர்க்கரை,ஜீனி ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது.  இதற்கான ஏற்பாடுகளை  தர்கா  நிர்வாகத்தினர் செய்திருந்தனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இது புதுசு! உணவு ஆர்டர் செய்யும் செயலிகளிலும் மோசடியா? எச்சரிக்கை!

தெலுங்கில் அறிமுகமாகும் சிம்பு?

விரைவில் 2,200 பேராசிரியர்கள் நியமனம்: அமைச்சர் கோவி. செழியன்

“சிம்ம ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

ரூ. 4 லட்சத்துக்காக அண்ணன் கொலை! கணவருடன் தங்கை செய்த சதி!

SCROLL FOR NEXT