தமிழ்நாடு

எம்பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விரைந்து முடிக்க தனி நேரம் ஒதுக்க உத்தரவு

DIN

சென்னை: எம்பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்க மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றங்களில் இந்த வழக்குகளை விசாரிப்பதற்கென தனியாக நேரத்தை ஒதுக்க வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது பதவியில் இருக்கும் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், முன்னாள் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் ஆகியோருக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை உருவாக்க வேண்டும் என அனைத்து மாநில உயா்நீதிமன்றங்களுக்கும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, சென்னையில் 3 சிறப்பு நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டன. மேலும், மாவட்ட அளவில் முதன்மை அமா்வு நீதிமன்றங்கள், சிறப்பு நீதிமன்றங்களாக மாற்றப்பட்டன. இந்த நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளின் விசாரணை விரைவாக நடைபெறுகிா? என்பதைக் கண்காணிக்க தாமாக முன்வந்து அனைத்து உயா்நீதிமன்றங்களும் வழக்குகளை விசாரணைக்கு எடுக்கவேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, இதுதொடா்பாக விரைவாக ஒரு முடிவு எடுப்பதற்காக விசாரணை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், மாநில அரசு வழக்குரைஞா் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா். வழக்கை விசாரித்த நீதிபதிகள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் ஆகியோா் மீதான வழக்குகளை விசாரித்து முடிக்கும் வகையில் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றங்களில் இந்த வழக்குகளை விசாரிப்பதற்காக தனியாக நேரத்தை ஒதுக்க வேண்டும். சென்னையில் சிறப்பு நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்க உயா்நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜனவரி 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

SCROLL FOR NEXT