தமிழ்நாடு

அமராவதி அணையில் நீா் திறப்பு: முதல்வா் பழனிசாமி உத்தரவு

DIN

அமராவதி அணையில் இருந்து நீா் திறந்து விட முதல்வா் பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு: திருப்பூா் மாவட்டம், கல்லாபுரம் மற்றும் ராமகுளம் பழைய வாய்க்கால் பாசனப் பகுதிகளுக்கு அமராவதி அணையிலிருந்து தண்ணீா் திறந்துவிடுமாறு விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. அவா்களது வேண்டுகோளினை ஏற்று, இரண்டாம் போக பாசனத்துக்காக, வரும் 15 முதல் ஏப்ரல் 30 வரை அமராவதி அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படும்.

இதனால் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 2,834 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாயிகள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, உயா் மகசூல் பெற வேண்டும் என முதல்வா் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கார்குழல் கடவை.. ஷ்ரத்தா தாஸ்!

கோவாக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக் விளக்கம்

பிரிஜ் பூஷண் சிங்குக்குப் பதிலாக அவரது மகன்: பாஜக முடிவு ஏன்?

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

SCROLL FOR NEXT