தமிழ்நாடு

சங்கடஹர மங்களமாருதி ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா

DIN

நீடாமங்கலம் அருகேயுள்ள திருவோண மங்கலம் ஞானபுரீ ஸ்ரீ மங்களமாருதி ஆஞ்சனேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகேயுள்ள திருவோணமங்கலம் ஞானபுரீசித்ரகூட சேத்ரம் ஸ்ரீசங்கடஹர மங்களமாருதி ஆஞ்சனேயர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஸ்ரீலட்சுமி நரசிம்மர், ஸ்ரீகோதண்டராமர் சுவாமிகள் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளியுள்ளனர். இக்கோயிலில் எழுந்தருளியுள்ள 33 அடி உயரம் கொண்ட விஸ்வரூப ஸ்ரீசங்கடஹரமங்கல மாருதி ஆஞ்சநேயர் சுவாமி இடுப்பில் நோய் மற்றும் சங்கடங்களை நிவர்த்தி செய்யும் சஞ்சீவி மூலிகைகளுடன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது உலகில் வேறு எங்கும் இல்லாத சிறப்பு. 

இங்கு ஆஞ்சனேய சுவாமியை வழிபட்டால் சங்கடங்கள் நீங்கி, மங்களம் உண்டாகும். கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி ஜகத்குரு சங்கராச்சாரியார் சமஸ்தானம்ஷகடபுரம் ஸ்ரீவித்யாபீடம் ஸ்ரீவித்யாஅபிநவ ஸ்ரீஸ்ரீகிருஷ்ணாநந்த தீர்த்த மஹா சுவாமிகளின் திருக்கரத்தால் செய்து வைக்கப்பட்டது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் மார்கழி அமாவாசை, மூலம் நட்சத்திரம் கூடிய திருநாளில் செவ்வாய்க்கிழமை அனுமன் ஜெயந்தி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு கோவிலில் அதிகாலை ஸ்ரீலட்சுமி நரசிம்மர், ஸ்ரீகோதண்டராமர் சுவாமிகள், 33 அடி உயர ஆஞ்சனேயர் சன்னதிகளில் சிறப்பு ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டது.10 ஆயிரத்து 500 வடைகளால் செய்யப்பட்ட வடைமாலை ஆஞ்சனேய சுவாமிக்கு சாற்றப்பட்டது. மகாதீபாராதனை காட்டப்பட்டது.

தொடர்ந்து ஆஞ்சனேய சுவாமிக்கு லட்சார்ச்சனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஆஞ்சனேயரைத் தரிசனம் செய்தனர். ஆஞ்சனேயர் சன்னதியில் ஜகத்குரு சங்கராச்சாரியார் சமஸ்தானம் ஷகடபுரம் ஸ்ரீவித்யாபீடம் ஸ்ரீவித்யாஅபிநவ ஸ்ரீஸ்ரீகிருஷ்ணாநந்த தீர்த்த மஹா சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி பேசினார். 

முன்னதாக 11ம் தேதி திங்கள்கிழமை மஹா சுவாமிகளின் முன்னிலையில் சிறப்பு யாகங்கள், மகா அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இதனை முன்னிட்டு சேலத்தில் தனிதறியில் பிரத்தியேகமாக நெய்யப்பட்ட பட்டு வஸ்திரம் ஆஞ்சனேய சுவாமிக்கு சாற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஆஞ்சனேய சுவாமியைத் தரிசனம் செய்தனர். அனுமன் ஜெயந்தி விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோவில் ஸ்தாபகர்ரமணி அண்ணா ஆலோசனைப்படி திருமடத்தின் ஸ்ரீகாரியம் சந்திரமவுலீஸ்வரர் செய்திருந்தார். 

இதேபோல் நீடாமங்கலம் வீர ஆஞ்சனேயர் கோயில், நீடாமங்கலம் சந்தானராமர் கோயில், ஆலங்குடி ஆபயவரதராஜப் பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. இதிலும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

SCROLL FOR NEXT