முகப்பு
தமிழ்நாடு

போகி பண்டிகை: சென்னையில் புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி

போகி பண்டிகையையொட்டி சென்னையில் பல்வேறு இடங்களில் மக்கள் தேவையற்ற பொருள்களை எரித்ததால் புகை மூட்டம் காணப்பட்டது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:17 PM
கோப்புப்படம்
பகிர்:

போகி பண்டிகையையொட்டி சென்னையில் பல்வேறு இடங்களில் மக்கள் தேவையற்ற பொருள்களை எரித்ததால் புகை மூட்டம் காணப்பட்டது. 

மார்கழி மாதத்தின் இறுதி நாளான இன்று போகி பண்டிகையை தமிழகம் முழுவதும் மக்கள் கொண்டாடி வருகின்றனர். 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்பதற்கேற்ப மக்கள் வீட்டை சுத்தம் செய்து இன்று அதிகாலை முதல் தேவையற்ற பொருள்களை தீயிட்டுக் கொளுத்தினர்.

  1. போகி பண்டிகையின்போது ஏற்படும் புகைமூட்டத்தைத் தவிர்க்க, பொருள்களை எரிக்க வேண்டாம் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்டவை மக்களுக்கு அறிவுறுத்தி இருந்தும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மக்கள் தேவையற்ற பொருள்களை ஆங்காங்கே எரித்ததால் கடும் புகைமூட்டம் ஏற்பட்டது. ஏற்கனவே சென்னையில் இன்று காலை பனிமூட்டமும் அதிகமாக இருந்தது. புகைமூட்டமும் அதிகரித்து  காணப்பட்டதால் சென்னையில் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
முழு கட்டுரையைப் படிக்க →