தமிழ்நாடு

கிணற்றில் தவறி விழுந்தவர் உயிருடன் மீட்பு: கிராம காவலர் தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு

DIN



 
அவிநாசி: அவிநாசி அருகே சின்ன ஓலப்பாளையதில் கிணற்றில் தவறி விழுந்தவரை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர் கிராம காவலருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

அவிநாசி அருகே அய்யம்பாளையம் ஊராட்சி சின்ன ஓலப்பாளையத்தை சேர்ந்தவர் கருப்பன் மகன் சின்னான்(33). இவர் அதே பகுதியில் உள்ள லட்சுமி என்பவருக்க சொந்தமான குப்பங்காடு தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் வியாழக்கிழமை நள்ளிரவு கால்நடைகளுக்கு உணவளித்து விட்டு தோட்டத்து பகுதியில் நடந்து வந்துள்ளார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக தோட்டத்தில் உள்ள நீரில்லாத 100 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்து விட்டார். இவரது சத்தம் கேட்டு நள்ளிரவில் ஓடிவந்த பொதுமக்கள் அப்பகுதியில் நியமிக்கப்பட்டுள்ள கிராம சிறப்பு காவலர் நவீன் குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

நவீன் குமார் கொடுத்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த அவிநாசி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் பாலசுப்பிரமணியம், தீயணைப்பு வீரர் தனபால், காவல் உதவி ஆய்வாளர் செந்தில் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் கிணற்றில் தவறி விழுந்த சின்னானை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

வியாழக்கிழமை நள்ளிரவு முதல் நீண்ட நேரம் போராடிய குழுவினர் வெள்ளிக்கிழமை அதிகாலை கிணற்றில் விழுந்த சின்னானை சிறு காயத்துடன் உயிருடன் மீட்டனர்.  

இதைத்தொடர்ந்து சின்னான் சிகிச்சைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து அவிநாசி போலீசார் விசாரித்து வருகின்றனர். 

மேலும்,  கிணற்றில் தவறி விழுந்தவரை உயிருடன் மீட்க, உதவிய கிராம சிறப்புக் காவலர் நவீன்குமார், தீயணைப்பு துறையினர் உள்ளிட்டோருக்கு அவிநாசி காவல் துணை கண்காணிப்பாளர் பாஸ்கர், பொதுமக்கள் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தார்.  

தஞ்சாவூரிலிருந்து வழிதவறி பெருமாநல்லூர் அருகே கணக்கம்பாளையம் பகுதிக்கு வந்த அண்ணன் தங்கை, (சிறுவன்-சிறுமி) ஆகியோர் கிராம சிறப்புக் காவலர் உதவியுடன் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். 
தற்போது  அவிநாசி அருகே கிணற்றில் விழுந்தவர் உடனடியாக உயிருடன் மீட்கப்பட்டதற்கு உதவிய சிறப்பு கிராம காவலர் திட்டத்திற்கு பொதுமக்கள் மிகுந்த வரவேற்பு அளித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பையில் அமமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

கொல்லங்கோடு நகராட்சி அலுவலகம் முன் தொழிலாளி தா்னா

பள்ளி மாணவ-மாணவியருக்கு கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

கைப்பந்துப் போட்டி: தங்கம் வென்ற ஒசூா் மகளிா் அணி

அந்தரபுரம் ஸ்ரீ சாஸ்தா கோயிலில் குடமுழுக்கு

SCROLL FOR NEXT