முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 2000-ஆகக் குறைவு

சென்னையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 2,008 ஆகக் குறைந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:17 PM
சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 2000-ஆகக் குறைவு
பகிர்:


சென்னை: சென்னையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 2,008 ஆகக் குறைந்துள்ளது.

இதனால், ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு சதவீதத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

சென்னையில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டிருக்கும் புள்ளி விவரத்தில், சென்னையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2,28,566 ஆக உள்ளது.

இவர்களில் 2,22,501 பேர் குணமடைந்துள்ளனர். 4,057 பேர் பலியாகிவிட்டனர். சென்னையின் 15 மண்டலங்களிலும் ஒட்டுமொத்தமாக 2,008 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நல்ல செய்தியாக, அனைத்து மண்டலங்களிலும் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 300-க்கும் கீழ் குறைந்துள்ளது. அதிகபட்சமாக, கோடம்பாக்கத்தில் 256 பேர் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தேனாம்பேட்டையில் இதுவரை கரோனாவுக்கு 505 பேர் பலியாகியுள்ளனர். அண்ணாநகரில் 24,402 பேர் குணமடைந்துள்ளனர்.

கரோனா பாதிப்பு.. மண்டலவாரியாக..

முழு கட்டுரையைப் படிக்க →