முகப்பு
தமிழ்நாடு

மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் 'டார்ச் லைட்' சின்னம்: கமல்

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் 'டார்ச் லைட்' சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:18 PM
கமல்ஹாசன் (கோப்புப்படம்)
பகிர்:

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் 'டார்ச் லைட்' சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளிபாய்ச்ச பாடுபட்ட மார்டின் லூதர் கிங் பிறந்தநாளன்று இது நிகழ்ந்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்திற்கும், எம்மோடு துணை நின்றவர்களுக்கும் நன்றி. ஒளி பரவட்டும் என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக புதுச்சேரியில் மட்டும் மக்கள் நீதி மய்யத்திற்கு 'டார்ச் லைட்' சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தங்கள் கட்சிக்கு பேட்டரி 'டார்ச் லைட்' சின்னத்தை ஒதுக்கக்கோரி மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →