முகப்பு
தமிழ்நாடு

தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்: ஓபிஎஸ், ஈபிஎஸ் மருத்துவமனைக்கு வருகை

தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:


தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர்.

அமைச்சர் காமராஜுக்கு கடந்த 6-ம் தேதி கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் காமராஜ், செவ்வாய்க்கிழமை மாலை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று அமைச்சருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.