தமிழ்நாடு

அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்பு: பூர்வீக கிராமத்தில் சிறப்புப் பூஜை

DIN

அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபருக்கான தேர்தல் கடந்த ஆண்டு (2020)நவம்பர் மாதம் நடைபெற்றது. இதில், ஜனநாயக கட்சியின் சார்பில், துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்ற கமலா ஹாரிஸ், புதன்கிழமை பதவியேற்பதையொட்டி, அவரது பூர்வீக கிராமமான திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள துளசேந்திரபுரம் கிராமத்தில் உள்ள அவரது குலதெய்வ கோவிலில் சிறப்புப் பூஜையும் வழிபாடும் நடைபெற்றது. 

துணை அதிபராக பதவியேற்க உள்ள கமலா ஹாரிஸின் தாய்வழி தாத்தா பைங்கா நாடு துளசேந்திரபுரத்தை சேர்ந்த பி.வி. கோபாலன் ஐயர், பாட்டி ராஜம் ஆகியோர் ஆவர். ஸ்டெனோகிராஃபர்ஆக வாழ்க்கையை தொடங்கிய கோபாலன், ஆங்கிலேய அரசில் சிவில் சர்வீஸ் பணியில் பணியாற்றியவர். 1930-ம் ஆண்டு சாம்பியா நாட்டுக்கு கொடிசியாவில் இருந்து வந்த அகதிகளைக் கணக்கெடுப்பு செய்வதற்காக இந்திய அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர், அமெரிக்காவில் குடியேறினார்.

இவருக்கு, சியமளா, சரளா என  இரண்டு பெண் குழந்தைகள். இதில், சியாமளா கோபாலன் என்பவருக்கு மகளாகப் பிறந்தவர் தான் கமலா ஹாரிஸ். இவர் சட்டப்படிப்பு பயின்றவர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார். சான் பிரான்சிஸ்கோ மற்றும் கலிஃபோர்னியாவில் அட்டார்னியாகவும், கலிபோர்னியாவில் ஷெனட்டராகவும் பதவி வகித்துள்ளார்.  

இவர், கடந்த 2019-ம் ஆண்டில் trues we hold என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் தனது தாத்தா பி.வி.கோபாலன் குறித்து பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். தனக்கு ஊக்கச் சக்தியாக தாத்தா திகழ்வதாகவும் கடந்த 1991-ம் ஆண்டு சென்னையில் தனது தாத்தா கோபாலனுக்கு என்பதாவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்ட போது சென்னை வந்திருந்ததாகவும் அங்கு அனைத்து குடும்பத்தினரும் கூடியிருந்தது மகிழ்ச்சியாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். 

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் முதன் முதலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், அதுவும் தங்கள் ஊரைச் சேர்ந்தவர் போட்டியிடுகிறார் என்பதை அறிந்த பைங்காநாடு மற்றும் துளசேந்திரபுரத்தை சேர்ந்த கிராம மக்கள் அவர், தேர்தலில் வெற்றி பெற வேண்டி கமலாஹாரிஷியின் குலதெய்வ கோவிலான தர்ம சாஸ்தா சேவகப் பெருமாள் கோவிலில், தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள், அன்னதானம், வழிபாடுகளைச் செய்தனர்.

தேர்தல் முடிவு அறிவிப்பு வெளிவந்த போது, பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இந்நிலையில், புதன்கிழமை கமலா ஹாரிஷ் துணை அதிபராகப் பதவி ஏற்க  உள்ளதால், தங்களின் மகிழ்ச்சியினையும் வெளிப்படுத்தும் வகையில் துளசேந்திரபுரம்  தர்ம சாஸ்தா சேவகப்பெருமாள் கோயிலில் கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சிறப்புப் பூஜைகள் செய்து வழிபட்டனர்.

இதன் மூலம் துளசேந்திரபுரம் கிராமம் உலகப்புகழ் பெற்றுவிட்டதாகவும், அமெரிக்காவின் துணை அதிபராகப் பதவியேற்கும் கமலா ஹாரிஸ்  சிறப்பாக ஆட்சி செய்ய வேண்டும் என்றும். அவரது, பூர்வீக கிராமமான துளசேந்திரபுரத்திற்கு அவர் வருகை தர வேண்டும் என்றும் தங்களின் விருப்பத்தை மக்கள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வு பெற்ற துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை திருட்டு

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

ஹரியாணா, தில்லி பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு!

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின், ஆண்ட்ரியா!

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

SCROLL FOR NEXT