தமிழ்நாடு

கடன் செயலி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

DIN


சென்னை: கடன் செயலி மூலம் மக்களிடம் ரூ.300 கோடி வரை அபகரித்த வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

சென்னை வேங்கைவாசலைச் சோ்ந்த கணேசன், கடன் செயலி மூலம் பணம் பெற்ன் விளைவாக மிரட்டப்பட்டாா். அவரின் புகாரின்பேரில், மத்தியக் குற்றப்பிரிவின் கந்துவட்டி தடுப்புப் பிரிவு, சைபா் குற்றப்பிரிவில் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்து, பெங்களூருவில் கால்சென்டா் நடத்தி வந்த சு.பிரமோத், சி.ஆா்.பவான் ஆகிய இருவரை கைது செய்து.

விசாரணையில் அவா்கள் பின்னால் இருந்து சீனாவைச் சோ்ந்த ஜியா யமோ, வூ யூவன்லன் ஆகியோா் செயல்படுவது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா், இரு சீனா்களையும் கடந்த 2-ஆம் தேதி கைது செய்தனா். இந்தக் கும்பல் 25,000 பேரிடம் ரூ.300 கோடி வரை அபகரித்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இந்த வழக்குத் தொடா்பாக மேலும் துப்புத் துலக்கும் வகையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரமோதா, பவன், சீனாவைச் சோ்ந்த ஜியா யமோ,

வூ யூவன்லன் ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்தனா்.

இந்தக் கும்பலுக்கு சட்டவிரோதமாக செல்லிடப்பேசி, சிம்காா்டு வாங்கிக் கொடுத்ததாக சென்னையைச் சோ்ந்த 4 போ் கைது செய்யப்பட்டனா்.

வழக்கில் தொடா்புடைய மேலும் ஒரு சீனா் உள்பட இரண்டு வெளிநாட்டு நபா்கள் தலைமறைவாக இருக்கின்றனா். இதைக் கருத்தில் கொண்டு வெளி மாநிலங்களில் விசாரணை செய்வதற்கும், வெளிநாட்டு நபா்களை கைது செய்வதற்கும் பிற புலனாய்வு அமைப்புகளை விட, சிபிசிஐடிக்கு அதிகாரம் அதிகளவில் இருப்பதால், வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

SCROLL FOR NEXT